அகலிகைப் படலம் - 523
வசிட்டமுனிவன் உபாயம் கூறல்
523.
‘ “வையம் ஆளுடை மன்னவர்
மன்னவ! மடிந்தோர்
உய்ய. நீள் தவம் ஒழிவு அறு
பகல் எலாம் ஒருங்கே.
செய்ய. நாள்மலர்க் கிழவனை
நோக்கி. நீ செய்தி;
நையல்!” என்று இனிது உரைத்தனன்.
நவை அறு முனிவன்.
மலர்க்கிழவன் - நான்முகன்; நவையறு முனிவன் - வசிட்டன்.
பிரமனை நோக்கி நீ தவம் செய்தால் உனது முன்னோர்
நற்கதியடைய வேண்டும் என்ற உனது எண்ணம் ஈடேறும் என்று
வசிட்டன் பகீரதனிடம் உரைத்தான் என்பது. 5-14
