அகலிகைப் படலம் - 512
சகரன் வேள்விக் குதிரையை இந்திரன் ஒளித்தது
512.
‘திண் திறல் புனை சகரனும்.
தனையர் சேவகங்கள்
கண்டு. முற்றிய அய மகம்
புரிதலும். கனன்று.
வண்டு துற்று தார் வாசவற்கு
உணர்த்தினர். வானோர்;
ஒண் திறல் பரி கபிலனது
இடையினில் ஒளித்தான்.
அசுவமேத யாகம் செய்யக் கருதிய சகரன் குதிரையை
அனுப்பினான்; அக்குதிரையை இந்திரன் மாயையால் கவர்ந்துசென்று
தவத்திலுள்ள கபில முனிவனுக்குப்பின்னே ஒரு மரத்தில்
கட்டிச்சென்றான் என்பது.
நூறு அசுவமேத யாகங்கள் செய்பவன் இந்திர பதவி அடைவான்.
அதனால் இந்திரனால் அந்த யாகத்தை ஏற்க முடியவில்லை. 5-3
