அகலிகைப் படலம் - 513

bookmark

வேள்விக்குதிரை மறைந்ததை அம்சுமான்
சகரனிடம் தரெிவித்தல்

513.    

‘வாவு வாசிபின் சென்றனன்
   அஞ்சுமான் மறுகி.
பூவில் ஓர் இடம் இன்றியே
   நாடினன் புகுந்து.
தேவர் கோமகன் கரந்தமை
   அறிந்திலன். திகைத்து.
மேவு தாதைதன் தாதைபால்
   உரைத்தனன். மீண்டு.
 
வாசி - குதிரை; பூ - பூமி.

குதிரைக்குக்   காவலாக இருந்த அம்சுமானுக்கு இந்திரனது வஞ்சகம்
தெரியவில்லை;    காணாத    குதிரையை   அம்சுமான்  பூமியெங்கும்
தேடியும் கிடைக்கவில்லை; தந்தை   சகரனிடம்   சொன்னான்  என்பது.
                                                        5-4