அகலிகைப் படலம் - 503
பாற்கடலில் தோன்றிய பொருள்களைத் திருமால்
பங்கிடுதல்
503.
‘வெருவும் ஆலமும் பிறையும்
வெள் விடையவற்கு அளித்து.
தருவும் வேறு உள தகைமையும்
சதமகற்கு அருளி.
மருவு தொல் பெரு வளங்களும்
வேறு உற வழங்கி.
திருவும் ஆரமும் அணிந்தனன்.
சீதர மூர்த்தி.
ஆலகாலம். பிறை நிலா- சிவனுக்கு பஞ்ச தருக்கள். தேவமாதர்.
நிதிகள். உச்சைச் சிரவம்; ஐராவதம். சிந்தாமணி - இந்திரனுக்கு;
புட்பகம் - குபேரனுக்கு; இலக்குமி. இரத்தினம் - திருமாலுக்கு; சீ -
இலக்குமி. ஒளி; பிறை - பிறப்பது (இளஞ்சந்திரனுக்கு) - காரணக்குறி.
பாற்கடலில் தோன்றிய பொருள்களைப் பங்கிட்ட வகை இதிற்
கூறப்பெறுகிறது. 3-24
