அகலிகைப் படலம் - 504
தேவரைக் கொல்லவல்ல புதல்வனைத் தருமாறு திதி
தன் கணவனை வேண்டல்
504.
‘அந்த வேலையில் திதி பெருந்
துயர் உழந்து அழிவாள்.
வந்து காசிபன் மலரடி
வணங்கி. “என் மைந்தர்
இந்திராதியர் புணர்ப்பினால்
இறந்தனர்; எனக்கு ஓர்
மைந்தன் நீ அருள். அவர்தமை
மடித்தலுக்கு” என்றாள்.
வேலை - காலம்; காசிபன் - திதியின் கணவன்.
அசுரர்களைக் கொன்ற தேவர்களைப் பழிவாங்கும் பொருட்டு ஒரு
மகனைத் தரவேண்டும் என்று திதி என்பவள் தன் கணவனிடம்
கேட்டாள் என்பது. 3-25
