அகலிகைப் படலம் - 493
துருவாசமுனிவன் மாலை பெற்ற வரலாறு கூறுதல்
493.
“பூத நாயகன். புவிமகள்
நாயகன். பொரு இல்
வேத நாயகன். மார்பகத்து
இனிது வீற்றிருக்கும்
ஆதி நாயகி விருப்புறு
தெரியல் கொண்டு அணைந்த
மாதராள்வயின் பெற்றனென்.
முயன்ற மா தவத்தால்.
பூத நாயகன் - பஞ்ச பூதங்களையும் படைத்து அவற்றை
நியமிப்பவன்; ஆதி நாயகி - கலைமகள். மலைமகள். இந்திராணி
முதலான தேவியர்களுக்கு நாயகி என்றபடி.
துருவாச முனிவன் அந்த மலரைப்பெற்ற பாங்கினை
எடுத்துரைப்பது இப்பாடல். 3-13
