அகலிகைப் படலம் - 490
துருவாசன் இந்திரனுக்குத் தந்த மாலையை
அயிராவதம் காலின் கீழ் இட்டுத் தேய்த்தல்
490.
‘தனை ஒவ்வாதவன் மகிழ்ச்சியால்.
வாசவன்தன் கை
வனையும் மாலையை நீட்டலும்.
தோட்டியால் வாங்கி.
துனை வலத்து அயிராவதத்து
எருத்திடைத் தொடுத்தான்;
படை செய் கையினால் பறித்து
அடிப்படுத்தது. அப் பகடு.
வாசவன் - இந்திரன். அஷ்ட வசுக்களுக்குத் தலைவன். எல்லாச்
செல்வங்களும் உடையவன். ஐராவதத்தின் துதிக்கைக்குப் பனைமரம்
உவமை. (திரட்சி. உருட்சி. நீட்சி வடிகால்).
துருவாசன் அம் மாலையை இந்திரனுக்குக் கொடுக்க. அவன்
அங்குசத்தால் அதைப்பெற்று யானையின் தலைமேல் வைக்க. அந்த
யானை அதைக் காலால் தேய்த்தது என்பது. 3-10
