அகலிகைப் படலம் - 491
துருவாசமுனிவர் சினம்
491.
“கண்ட மா முனி விழி வழி
ஒழுகு வெங் கனலால்.
அண்ட கூடமும் சாம்பராய்
ஒழியும்”என்று. அழியா.
விண்டு நீங்கினர் விண்ணவர்;
இரு சுடர் மீண்ட;
எண் திசாமுகம் இருண்டது;
சுழன்றது எவ் உலகும்.
அதைக்கண்ட துருவாசன் பெருங்கோபம் கொள்ள வானவர்
யாவரும் ஓடிப்போகத் திசைகள் எங்கும் இருண்டன என்பது. சந்திர
சூரியரும் தம் கதியிற் செல்லத் தடுமாறினர் என்றார். 3-11
