அகலிகைப் படலம் - 485
துருவாசன் இந்திரலோகம் அடைதல்
485.
‘ “தெய்வ நாயகி சென்னியில்
சூடிய தெரியல.
ஐய! யான் பெறப் புரிந்தது
எத் தவம்?” என ஆடி.
வெய்ய மா முனி சென்னியில்
சூடியே. வினை போய்
உய்யும் ஆறு இது
என்று உவந்து வந்து. உம்பர் நாடு அடைந்தான்.
வினை போய் உய்யுமாறு- கருமம் ஒழிந்து நற்கதி பெறும்விதம்
இதுவென்று; தெய்வ நாயகன் - திருமால்; தெய்வ நாயகி - திருமகள்.
தேவர்களின் தலைவியான திருமகளின் பூமாலையைத் தான்
பெறுவதற்கு என்ன மாதவம் செய்தேன் என மகிழ்ந்து அதைத்தன்
முடியிலே சூடிக்கொண்டு தெய்வலோகம் சென்றான் என்பது. 3-5
