'எல்' போர்டு
"பீச்சிலே உட்கார்ந்திருந்த காதல் ஜோடிகளிலே சிலபேரு கழுத்திலே 'எல்' போர்டு மாட்டியிருக்காங்களே! ஏன்?"
"அவங்க புதுசா காதலிக்க கத்துக்கிறவங்களாம்!"
"உயிருக்குயிராக் காதலிச்சேன்னு சொன்னேளே? உங்க காதலி பேரைச் சொல்லுங்க?"
எண்பது வருசத்துக்கு முன்னாலே காதலிச்சது! பேரு மறந்து போச்சு!"
"பார்க்கிற பொண்ணுங்க எல்லாம் என்னைய 'பிஞ்சு மூஞ்சி'ங்கறாங்க... பார்க்க டெர்ரரா நாலஞ்சு தழும்புங்க முகத்துல வேணும்
டாக்டர்...!"
காதலன்: "என்னை நம்பவே முடியாதுன்னு சொல்றீயே! ஏன்?"
காதலி: "எனக்காக உயிரை விடுறதா ஆயிரம் தடவை சொல்லியிருக்கீங்க.... ஒரு தடவையாவது விட்டதுண்டா?"
"எனக்கு 25 வயசு ஆகுது! என் காதலுக்கு 45 வயசு ஆகுது!"
"போன ஜென்மத்திலேயே ஆரம்பிச்சிட்டியா?"
"அக்காவுக்கு 25 வயசு! தங்கச்சிக்கு 20 வயசு! நான் ரெண்டு பேரையும் காதலிக்கேனே?"
