விவேகானந்தர் பாறை ஒரு பார்வை

விவேகானந்தர் பாறை ஒரு பார்வை

bookmark


விவேகானந்தர் பாறை என்பது கன்னியாகுமரிக் கடலில் அமைந்துள்ள ஒரு பாறையாகும். சுவாமி விவேகானந்தர் கன்னியாகுமரிக்கு வந்திருந்த போது கடலுக்குள் அமைந்திருக்கும் இந்தப் பாறைக்கு நீந்திச் சென்று, மூன்று நாட்கள் தியானம் செய்திருக்கின்றார். எனவே அவரது நினைவாக இந்தப் பாறையில் விவேகானந்தர் நினைவு மண்டபம் ஒன்று கட்டப்பட்டு 1972 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. அதன் பிறகு இந்தப் பாறைக்கு விவேகானந்தர் பாறை என்ற பெயர் ஏற்பட்டது. இப்பாறையில் விவேகானந்தர் நினைவு மண்டபமும் அம்மன் பாதக் கோயில் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளன. இதனருகிலுள்ள மற்றொரு பாறையில் உலகின் மிக உயரமான திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ பாதப் பாறை:-

கன்னியாகுமரியான ஸ்ரீ பகவதியம்மன், சிவபெருமானை மணப்பதற்காக இந்தப் பாறையில் நின்று தவம் செய்ததாகவும் அதனால் இந்தப் பாறையில் அவரது பாதத்தின் தடம் பதிந்துள்ளது என்றும் இந்து சமயத்தவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். இந்தத் தொன்ம நம்பிக்கையில் இந்தப் பாறைக்கு முதலில் ஸ்ரீ பாதப் பாறை என்று தான் பெயர் இருந்தது என்கின்றனர்.

அம்மன் பாதக் கோயில்

இந்து சமயத்தவர்களால் அம்மன் பாதம் என்று கருதப்படும் இடம், கண்ணாடியில் பார்வைக்குத் தெரியும்படி பாதுகாக்கப்பட்டுள்ளது. இந்தப் பாதத்தைச் சுற்றிக் கோயில் போன்ற அமைப்பில் திருபாத மண்டபம் எனும் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.