லஞ்ச் டயம்

bookmark

கடவுள்: மனிதா உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்?

மனிதன்: இந்தியாவுலேர்ந்து அமெரிக்காவிற்கு ரோடு போட்டு கொடுங்க சாமி!!

கடவுள்: அது கஷ்டமாச்சே...வேறு ஏதாவது கேள்.

மனிதன்: அப்ப என் மனைவி பேச்சை குறைக்கணும், நான் சொல்றதை கேட்கணும், எதையும் வாங்கித் தரச்சொல்லிக் கேட்கக்கூடாது...

கடவுள்: சரி சரி.. அமெரிக்காவுக்கு ரோடு சிங்கிளா, டபுளா..?!!

அவன்: என்னடா அந்த ஓட்டல் மட்டும் மத்தியானத்திலே மூடிடுறாங்க?

மற்றவன்: அதுவா, லஞ்ச் டயம் என்பதாலே அங்க வேலை செய்யறவங்க எல்லாம் வெளியே சாப்பிடப் போயிடுவாங்க.

"அந்த வீட்ல இப்பல்லாம் மாமியார் மருமகள் சண்டை போடுற சத்தமே காணோமே! சமரசம் ஆயிட்டாங்களா?"

"நீங்க ஒண்ணு... சண்டை போடுறதுக்குன்னே ஒரு ஏ.சி.ரூம் தயார் பண்ணிட்டாங்க!"

"என் உயிரைக் காப்பற்றிய நர்சையே நான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்."

"எப்படிக் காப்பாத்தினா?"

"ஆபரேசன் ரூமிலேயிருந்து பின்வழியா என்னைத் தப்பிச்சிப் போக வச்சது அவதான்!"

கணவன்: குழந்தைக்கு மாட்டுப் பாலைக் கொடுக்காதே, தாய்ப் பாலைக் கொடுன்னு தலைபாடா அடிச்சிக்கிட்டேனே கேட்டியா?

மனைவி: ஏன், என்னாச்சு?

கணவன்: குழந்தை 'அம்மா.... அம்மா...'ன்னு கூப்பிட்டுக்கிட்டு மாடு பின்னாலேயே போகுது.