மார்க் லிஸ்ட்

bookmark

"திடீர்னு மக்கள் பிரச்சினைக்காக போராட்டம் நடத்தி ஆவேசமா பேசினேனே... எப்படி இருந்தது!"

"உங்களுக்கு நடிக்க வராதுன்னு இனிமே யாரும் சொல்ல முடியாது சார்...!"

"ஏன்டீ! எப்பப் பார்த்தாலும் வாழைப்பூ மாதிரி தலையைக் குனிஞ்சிக்கிட்டே இருக்கே?

"கொஞ்சம் நிமிர்ந்து அங்கும் இங்கும் பராக்குப் பார்த்திருந்தா உங்களைக் கட்டித் தொலைச்சிருப்பேனா?"

"உங்க பொஞ்சாதியைப் பத்தி யாராவது சந்தேகப்பட்டுத் தப்பாப் பேசினால்.... நானே செருப்பாலே அடிப்பேன்!"

"நீங்க யாரு?"

"உங்க பொஞ்சாதிக்கு ரெண்டாவது புருஷன்! அவங்க சொல்லலியா?"

"மார்க்கு குறையா எடுத்திருக்கே! உங்க அப்பாவோ போலீஸ்காரரு! உதைக்க மாட்டாரா?"

மாசா மாசம் மாமூல் கொடுத்தாப்போதும்! மார்க் லிஸ்ட் அட்டையிலே கையெழுத்துப் போட்டுக் கொடுத்துருவாரு!"

"கலியாணத்துக்கு முதல் நாளே ரிசப்ஷன் ஏன்டா வைக்குறாங்க?"

"கலியாணத்தன்னிக்கே விவாகரத்து ஆயிடிச்சுன்னா? வந்தவனுக்கு எவன்டா சாப்பாடு போடுவான்?"