ராமநாதபுரத்து மன்னர் சுவாமிஜிக்கு செய்த வரலாறு போற்றும் மரியாதை

ராமநாதபுரத்து மன்னர் சுவாமிஜிக்கு செய்த வரலாறு போற்றும் மரியாதை

bookmark


1897 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் நாள் இந்தியாவின் தென்கோடியில் உள்ள பாம்பன் முனையை சுவாமிஜி வந்தடைந்தார். அவர் ஊர் ஊராக யாத்திரை செய்து கொண்டு இருந்தபோது, அவருடைய பெருமையை அறிந்திருந்தவர் ராமநாதபுரத்து மன்னர் பாஸ்கர சேதுபதி. சுவாமிஜி தாய் நாடு திரும்பும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டு இருந்தார். அவர் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் சுவமிஜியைக் காணாமல் வருந்தி இருந்தார்.

ஜனவரி 26 ஆம் நாள் அன்று மன்னர், கப்பலுடன் பாம்பன் முனையில் காத்துக் கொண்டு இருந்தார். சுவாமிஜி இலங்கையில் இருந்து நீராவிப் படகில் வந்து, மன்னரின் கப்பலில் ஏறினார்.

மன்னரும் பிறரும் சுவாமிஜியை வணங்கினார்கள்; அத்துடன் தொழுதார்கள். சுவாமிஜி அமெரிக்க மகாநாட்டில் பேச வேண்டும் என்று முதலில் எண்ணிய பல அன்பர்களில் மன்னரும் ஒருவர். தாய் நாட்டின் மண்ணை மிதித்ததும் மன்னரைச் சந்தித்ததில் சுவாமிஜியும் மகிழ்ச்சி அடைந்தார். அதனை மன்னரிடமே கூறியதும், அவர் பேச்செழும்பாத நிலையை அடைந்தார்.

பாமனில் மக்களின் வரவேற்பு முடிந்த பிறகு ராமநாதபுரத்து மன்னர், ராஜமாளிகைக்கு சுவாமிஜியை ஊர்வலமாக அழைத்துச் செல்வதற்கான பிரம்மாண்டமான ஏற்பாடுகளைச் செய்து இருந்தார்.

சுவாமிஜியின் பேரில் அவருக்கு இருந்த பேரன்பும் பெருமதிப்பும் அளவிட முடியாததாக இருந்தது.

உயர் ஜாதிக் குதிரைகள் பூட்டிய வண்டியில் சுவாமிஜி அமர்ந்தார். உடனே மன்னர் வண்டியின் குதிரைகளை அவிழ்க்குமாறு கூறினார்.

அனைவரும் வியக்கும் வண்ணம் மன்னரும் அரசாங்க அதிகாரிகளும் சுவாமிஜி அமர்ந்த வண்டியை பெருமிதத்துடன் இழுத்துச் சென்றார்கள்.

அப்போது சுவாமிஜியின் மாண்பையும் மன்னரின் பண்பையும் கூறிப் போற்றி மகிழ்ந்தனர் மக்கள்.