முதுமை

முதுமை

bookmark

முதுமை எண்ணுகிறது இளமை துணிகிறது.

பல்லில்லாத கிழவனும் பச்சிளம் குழந்தைதான்.

தன்னை ஆள்பவன் எண்பதிலும் இளையவன் தன்னை ஆளாதவன் முப்பதில் முடிவான்.

முதுமை துன்பம் தரும் சக பயணி.

(அ) கிழநாய் வித்தை கற்காது (ஆ) ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமர் (இ) இளமையில் கல்லாதது முதுமையில் வராது.

கிழ நரிக்குத் தந்திரம் கற்க வேண்டுமா.

கிழ வேடன் வலைவிரிப்பதில் கெட்டிக்காரன்.

முதியோர் வாக்கு பொய்ப்பது அரிது.

நன்கு வாழ்பவன் நெடிது வாழ்வான் இளமையில் திருந்தாதவன் முதுமையில் தள்ளாடுவான்.

குறுகிய மனித வாழ்வில் காலத்தை வீணாக்காதே! முதுமை எரிச்சலூட்டும் விருந்தாளி.

முதுமை பக்குவத்தின் அடையாளம்.