முதலைக் கண்ணீர் வடிப்பது போல

முதலைக் கண்ணீர் வடிப்பது போல

bookmark

விளக்கம் :

யாராவது போலியாக அழும்போது முதலைக் கண்ணீர் வடிப்பது போன்று என்று ஒரு பழமொழியைச் சொல்வார்கள். அதாவது அறிவியல் பூர்வமாக முதலை கண்ணீர் வடிப்பதில்லை. அதனால் இந்த அழுகை போலியானது என்பதை உணர்த்துவதற்காக அவ்வாறு சொல்லப்படுகிறது. ஆனால் அதற்கான பொருள் அதுவல்ல, முதலை இழந்தவன் வடிக்கிற கண்ணீர் போல என்பதுதான் நாளடைவில் திரிந்து முதலைக் கண்ணீர் என்றாகிவிட்டது. அதாவது தொழிலில் பணத்தை போட்டு செய்தவன் இழப்பு ஏற்பட்டால் கண்ணீர் வடிப்பதைப் போன்றது என்பதை கூறவே இந்த பழமொழி உண்டானது.