மிதிலைக் காட்சிப் படலம் - 700

bookmark

கோசிகன் வரலாற்றைச் சதானந்தர் முடித்தல்

சதானந்தர் குமரர்களை வாழ்த்திப் பெயர்தல்
 
700.

‘ஈது முன்னர் நிகழ்ந்தது; இவன் துணை
மா தவத்து உயர் மாண்பு உடையார் இலை;
நீதி வித்தகன்தன் அருள் நேர்ந்தனிர்;
யாது உமக்கு அரிது?’ என்றனன். ஈறு இலான்.
 
முன்னர்- முன்னே; நிகழ்ந்தது ஈறு - நடந்த வரலாறு   இதுவாம்;
இவன்  துணை  - இந்தக் கௌசிகனுக்கு ஒப்பாக; மா தவத்து  உயர்
- பெருந்தவத்தால் உயர்ந்த; மாண்பு உடையார்- மாட்சிமையுடையவர்;
இலை - வேறு  யாரும்  இல்லை;  நீதி  வித்தகன்தன் - நியம  நீதி
தவறாதவனும்   மெய்யுணர்வுடையவனும்   ஆகிய  இம்   முனிவனது;
அருள் நேர்ந்தனிர் - கருணையை நீங்கள் பெற்றுள்ளீர்கள்;  உமக்கு
அரிது  யாது -  (ஆதலால்) உங்களுக்குச் செய்வதற்கு அரிய  செயல்
யாது உள்ளது; என்றனன் - என்று (இராம இலக்குவர்களை  நோக்கிச்)
சொல்லி  முடித்தான்; ஈறு  இலான்  -  (சொன்னவன்   யாரென்றால்)
எல்லையில்லாத நற்குணத்தவனான சதானந்த முனிவன்.    

ஈறு இலான்: ஆனந்தத்திற்கு முடிவு இல்லாதவன் என்பர்.       137