மிதிலைக் காட்சிப் படலம் - 701

bookmark

சதானந்தர் குமாரர்களை வாழ்த்திச் செல்லல்

701.

என்று கோதமன் காதலன் கூறிட.
வென்றி வீரர் வியப்பொடு உவந்து எழா.
ஒன்று மா தவன் தாள் தொழுது ஓங்கிய
பின்றை. ஏத்திப் பெயர்ந்தனன். தன் இடம்.
 
என்று கோதமன் - என்று  (இவ்வாறு)  கௌதம    முனிவனுடைய;
காதலன்   கூறிட  -    மைந்தனாகிய  சதானந்த முனிவர்  சொல்ல;
வென்றி வீரர்- வெற்றி வீரர்களாகிய இராமலக்குவர்;   வியப்பொடு -
அதியத்தோடு  (கேட்டு);  உவந்து  எழா - மகிழ்ச்சியடைந்து  எழுந்து;
ஒன்றும்   மாதவன்   -   பெருமை   பொருந்திய   தவத்தோனான
அம்முனிவரின்;  தாள்  தொழுது  -  அடிகளில்  விழுந்து   வணங்கி;
ஓங்கிய  பின்றை - (எழுந்த) பின்பு; ஏத்தி - அச் சதானந்த முனிவன்
(அக்  குமாராக்ளை)  -  வாழ்த்திவிட்டு; தன் இடம் பெயர்ந்தனன் -
தன் இடத்திற்குப் போனான்.                                 138