மிதிலைக் காட்சிப் படலம் - 699

bookmark

தேவர்கள் தம்மிடஞ் சார்தல்

699.

‘அன்ன வாசகம் கேட்டு உணர் அந்தணன்.
சென்னி தாழ்த்து. இரு செங்கை மலர் குவித்து.
“உன்னு நல் வினை உற்றது” என்று ஓங்கினான்.
துன்னு தேவர்தம் சூழலுள் போயினார்.
 
அன்ன    வாசகம் - (பெருந்தேவர்களின்) அந்த  வார்த்தைகளை;
கேட்டு உணர் - செவிகளில் கேட்டு அறிந்த; அந்தணன் -  கௌசிக
முனிவன்; சென்னி தாழ்ந்து  -  தலைவணங்கி;  இரு   செங்கமலம்
குவித்து -  தாமரை  போன்ற  இரு  கைகளையும்  கூப்பி;  உன்னும்
நல்வினை - யாவராலும் கருதப்படுகின்ற நல்ல தவப்பயன்;  உற்றது -
(எனக்கு   வந்து) பொருந்தியது;   என்று   ஓங்கினான்  -   என்று
பூரிப்படைந்தான்;  துன்னு தேவர்  -  (பின்பு) அங்கு வந்து  சேர்ந்த
தேவர்களும்;  தம்  சூழலுள் - தத்தம்  இடத்திற்கு;  போயினார் -
சென்றார்கள்.                                             136