மிதிலைக் காட்சிப் படலம் - 695
695.
‘தமம் திரண்டு உலகு யாவையும் தாவுற.
நிமிர்ந்த வெங் கதிர்க் கற்றையும் நீங்குற.
கமந்த மாதிரக் காவலர் கண்ணொடும்.
சுமந்த நாகமும். கண் சும்புளித்தவே.
தமம் - இருளானது; திரண்டு - மிகுதியாக ஒருங்கு சேர்ந்து;
உலகு யாவையும் - உலகங்கள் எல்லாம்; தாவுற - பரவி நிற்க
(அதனால்); நிமிர்ந்த வெம்கதிர் - சூரியனது வெப்பமான கதிர்களின்;
கற்றையும் நீங்குற - தொகுதியும் மறைந்து போக; கமந்து
மாதிரக் காவலர் - வானுலகில் நிறைந்த திக்குப் பாலகர்களின்;
கண்ணொடும் - கண்களுடன்; சுமந்த நாகக் கண்ணும் - பூமியைத்
தாங்கும் திக்கு யானைகளின் கண்களும்; சும்புளித்தவே - கூசின.
கமந்த: ‘கமம்’ என்ற உரிச்சொல்லின் வினை விகற்பமாகும். (தொல்.
உரி.59) சும்புளித்தல்: மாதிரக் காவலர்: கிழக்கு-இந்திரன். தென்
கிழக்கு - அக்கினி. தெற்கு - இயமன். தென்மேற்கு-நிருதி. மேற்கு -
வருணன். வடமேற்கு - வாயு. வடக்கு - குபேரன். வடகிழக்கு -
ஈசானன். 132
