மிதிலைக் காட்சிப் படலம் - 672

bookmark

திரிசங்குவை வசிட்டன் சபித்தல்

672.

‘’நினக்கு ஒலாதுஆகின். ஐய!
   நீள் நிலத்து யாவரேனும்
மனக்கு இனியாரை நாடி.
   வகுப்பல் யான். வேள்வி” என்ன.
“சினக் கொடுந் திறலோய்! முன்னர்த்
   தேசிகற் பிழைத்து. வேறு ஓர்
நினக்கு இதன் நாடி நின்றர்;
   நீசன் ஆய் விடுதி” என்றான்.
 
(திரிசங்கு வசிட்டனை நோக்கி) ஐய- தலைவனே!” நினக்கு ஒலாது
ஆகின்  -  (என்னை   இவ்வுடம்போடு  சொர்க்கம்  ஏற்றும்  செயல்)
உனக்கு  முடியாது என்றால்;  நீள்  நிலத்து  - பெரிய இப்பூவுலகில்;
யாவரேனும் -  எவராயினும்;   மனக்கு   இனியாரை நாடி -  என்
மனதுக்கு   இசைந்தவரைத்   தேடி;    யான்  வேள்வி வகுப்பல்-
(அவரைக் கொண்டு) எண்ணிய  யாகத்தை  நான் செய்வேன்;  என்ன
-  என்று  கூற;   (வசிட்டன்    கோபங்கொண்டு  அவனை நோக்கி);
சினம்  கொடு  திறலோய்  -   சினமும்   கொடிய    வலிமையும்
உடையவனே!; முன்னர்த் தேசிகன் - முன்னோர்களின்  குருவினிடம்;
பிழைத்து - அபசாரப்பட்டு (அவனை நீக்கி);  வேறு  ஓர்  நினக்கு
இதன்- உனக்கு விருப்பமானவேறொரு குருவை; நாடி நின்றாய்-  (நீ)
தேடி நின்றாய்; (ஆதலால்);  நீசன் ஆய் - புலையனாய்;  விடுதி  -
ஆகி  விடுவாய்;  என்றான்  -  என்று சபித்தான்.    

பரம்பரையான     ஆசிரியன்  தகுந்தவனாகியிருக்க    அவனை
அவமதித்து  வேறொரு  குருவைத் தேடுதல் முறைகேடானது. இதன் -
ஹிதன்;நீசன்- சண்டாளன்.                                  109