மிதிலைக் காட்சிப் படலம் - 585
அரண்மனையைச் சூழ்ந்துள்ள அகழி
585.
உம்பர்க்கு ஏயும் மாளிகை
ஒளி நிழல் பாய.
இம்பர்த் தோன்றும் நாகர்தம்
நாட்டின் எழில் காட்டி.
பம்பிப் பொங்கும் கங்கையின்
ஆழ்ந்த. படை மன்னன்
அம் பொன் கோயில் பொன் மதில்
சுற்றும். அகழ் கண்டார்.
உம்பர்க்கு ஏயும் - (இந்திரன் முதலான) தேவர்களுக்கு
(தங்குவதற்கு) ஏற்ற; மாளிகை ஒளி நிழல் - மாளிகை வரிசைகளின்
சாயை;- பாய - (தன்னிடத்தே) படிவதால்; இம்பர்த் தோன்றும் -
நிலவுலகில் காணப்படுகிற; நாகர் தம் நாட்டின் எழில் - வானுலக
அழகினை; காட்டி - (தன்னிடம்) காண்பித்து; பம்பிப் பொங்கும் -
(அலைகள்) மிகுந்து மேலே (தண்ணீர்) பொங்குகின்ற; கங்கையின்
ஆழ்ந்த - கங்கா நதிபோல ஆழமாகவுள்ள; படை மன்னன்
- சேனைகளையுடைய சனக மன்னனது; அம்பொன் கோயில்
- பொன்மயமான அரண்மனை; பொன்மதில் சுற்றும் - சுற்றிமுள்ள
பொன்னாலாகிய உள்மதிலைச் சூழ்ந்துள்ள அகழியை; கண்டார் -
கண்டார்கள்.
நீர்நிலை அகழி: அழகிய பொன்மயமான மாளிகைகளின்
வரிசைகளோடு கூடிய அரண்மனையைச் சூழ்ந்துள்ள;பொன்மயமான
வானுலகத்தின் பிம்பத்தைத் தனது நடுவிலே காட்டும் நீர்
நிலையை ஒக்கும் என்றார். அணி: தற்குறிப்பேற்றவணி. 22
