மிதிலைக் காட்சிப் படலம் - 571
571.
தண்டுதல் இன்றி ஒன்றி.
தலைத்தலைச் சிறந்த காதல்
உண்டபின். கலவிப் போரின்
ஒசிந்த மென் மகளிரேபோல்.
பண் தரு கிளவியார்தம்
?புலவியில் பரிந்த கோதை.
வண்டொடு கிடந்து. தேன்சோர்.
மணி நெடுந் தெருவில் சென்றார்.
தண்டுதல் இன்றி- நீங்காமல்; தலைத் தலை ஒன்றி - (கணவன
மனைவி என்கிற) இரண்டு இடங்களிலும் ஒரு தன்மைய தாய்; சிறந்த
காதல் - மிகுதியான ஆசையின் பயனான காம இன்பத்தை;
உண்டபின் - (ஆடவரும் மகளிரும்) ஒருசேர அனுபவித்த பின்பு;
கலவிப் போரின் - அந்தப் புணர்ச்சியாகிய போரிலே; ஒசிந்த
- சோர்ந்து கிடந்த; மென் மகளிரே போல் - மென்மையான
பெண்களைப் போல; பண்தரு கிளவியார்தம் - இசைப் பண்ணைப்
போன்ற சொற்களைப் பேசும் பெண்களின்; புலவியில்- ஊடல்களிலே;
பரிந்த கோதை - (அவர்களால்) கழற்றி வீசப்பட்ட மாலைகள்;
வண்டொடு கிடந்து - (தம்மேல் மொய்த்த) வண்டுகளுடன்
கீழே விழுந்து கிடந்து; தேன் சோர் - தேன் வழிவதற்கு
இடமான; மணி நெடுந்தெருவில் - அழகிய பெருவீதிகளில்;
சென்றார் - போனார்கள்.
மாதரும் பூமாலைகளும்: புணர்ச்சிக்குப்பின் மெலிந்து உறங்குகிற
பெண்களைப்போல் அம்மகளிரால் ஊடலால் வீசியெறியப்பட்ட
பூமாலைகள் வாடிக் கிடக்கின்றன. மிதிலைத்தெரு: மிதிலையின்
தெருக்கள் பலவகைப் பட்டன என்பதைத் தெரிவிக்க மூன்று
பாடல்கள் அமைந்துள்ளன. 7
