மாப்பிள்ளை

bookmark

1. "எனக்கும் என் மனைவிக்கும் கருத்து வேறுபாடு வருது சார் ..." 

"எப்படி..?"

"நான் "சுடு தண்ணி"ன்னு சொல்றேன்; அவ அதை "காபி"ன்னு சொல்றா..!"

ப.உமாமகேஸ்வரி

2. "அரசியல்வாதிக்கும் தீவிரவாதிக்கும் என்ன வித்தியாசம்?"

"அரசியல்வாதிங்க தோள்ல "துண்டு" போடுவாங்க; தீவிரவாதிங்க "குண்டு" போடுவாங்க!"

பி.எம்.சுரேஷ்

3. "கடன் தொல்லை தாங்க முடியலை.... அதனால குடும்பத்தோடு...."

"குடும்பத்தோடு என்ன செய்யப் போறீங்க?"

"குடும்பத்தோடு படத்துக்குப் போகப் போறோம்!"

தஞ்சை அனார்கலி

4. "நாளைக்கு வரும்போது வெறும் வயித்தோட வாங்க..."

"போகும் போது டாக்டர் ...?"

"வெறும் பாக்கெட்டோட போகலாம்!"

எஸ்.எஸ்.பூங்கதிர்

5. "மாப்பிள்ளை பெரிய ரவுடியா இருப்பாரோ..?"

"ஏன் அப்படிக் கேக்கறீங்க..?"

"பார்டர்ல ஜரிகை வச்ச லுங்கி வேணும்னு கேக்கறாரே!"