பூமத்திய ரேகை
1. "இவரு உலகத்துக்கே ஜோசியம் சொல்வாரா.... எப்படி?"
"பூமத்திய ரேகையைப் பார்த்துத்தான்..."
ருக்மணி தேசிகன்
2. "டாக்டருக்கும், ஆக்டருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு.... எப்படின்னு சொல்லு?"
"ரெண்டுபேருமே தியேட்டருக்கு வரவச்சுதான் கொல்லுவாங்க!"
எம்.செந்தில்குமார்
3. "புது மிக்ஸி வாங்கித் தருவீங்கன்னு பார்த்தா, பழசையே ரிப்பேர் பண்ணிக் கொடுத்துட்டீங்களே..?
"ஹி... ஹி... இது ரீமிக்ஸி"!"
எஸ்.எஸ்.பூங்கதிர்
4. "என்னோட கச்சேரிக்கு வந்து சத்தமா கை தட்டணும்..."
"நீங்க பாடற போதா..?"
"இல்லை... பக்கத்து சீட்டுக்காரர் தூங்கறபோது!"
என்.பர்வதவர்த்தினி
5. "போலீஸா இருந்த நான் சாமியாரா ஆகியிருக்கக் கூடாது!"
"ஏன் சாமி?"
"எல்லாரும் போலீஸாமியார்"னு சொல்றாங்களே!"
