மருதகாசி
வாழ்க்கை வரலாறு
மருதகாசி, திருச்சிராப்பள்ளி மாவட்டம் மேலக்குடிகாடு கிராமத்தில் பிப்ரவரி 13,1920 ல் பிறந்தார். இவரது தந்தை பெயர் அய்யம்பெருமாள் உடையார். தாயார் மிளகாயி அம்மாள். உள்ளூரில் தொடக்கக் கல்வி பயின்றபின், கும்பகோணம் அரசுக் கல்லூரியில் சேர்ந்து, உயர் கல்வி கற்றார்.
வாழ்க்கை குறிப்பு:
மருதகாசி, சிறு வயதிலேயே கவிதை எழுதும் ஆற்றலைப் பெற்றிருந்தார். கல்லூரிப் படிப்புக்குப் பிறகு, குடந்தையில் ‘தேவி நாடக சபை’யின் நாடகங்களுக்குப் பாடல்கள் எழுதி வந்தார். 1949 இல் சேலம் மாடர்ன் தியேட்டர்சார் மாயாவதி என்ற படத்தைத் தயாரித்து வந்தனர். டி. ஆர். மகாலிங்கம், அஞ்சலிதேவி இணைந்து நடித்த இந்தப்படத்தை டி. ஆர். சுந்தரம் இயக்கி வந்தார்.
இந்தப் படத்திற்குத் தனது முதல் பாடலை மருதகாசி எழுதினார். பெண் எனும் மாயப் பேயாம் பொய் மாதரை என் மனம் நாடுமோ… என்று தொடங்கும் அந்த பாடலுக்கு ஜி. ராமநாதன் இசை அமைத்தார். இதுவே மருதகாசி எழுதிய முதல் திரைப்படப் பாடலாகும்.
இவர் எழுதிய பாடல்களில் சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா (நீலமலைத் திருடன்), ஆளை ஆளைப் பார்க்கிறார் (ரத்தக்கண்ணீர்), சமரசம் உலாவும் இடமே. ரம்பையின் காதல் (1939) போன்ற சில பாடல்கள் நினைவை விட்டு நீங்காத பாடல்கள் ஆகும்.
சிறப்புகள்:
மருதகாசியின் திரை இசைப் பாடல்களையும் புத்தகங்களையும், மே 2007 இல் தமிழக அரசு அரசுடைமை ஆக்கியது. மருதகாசி தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் ஆவார். 1949 இல் பாடல்கள் எழுதத் தொடங்கிய இவர் சுமார் இருநூற்று ஐம்பதிற்கும் அதிகமான திரைப்படங்களுக்கு நாலாயிரத்திற்கும் அதிகமான பாடல்கள் எழுதியுள்ளார். இவர் 29 நவம்பர் 1989ல் காலமானார்.
