போஸ்டர்

bookmark

"தலைவரை ஏன் கைது பண்ணிக் கூட்டிட்டுப் போறாங்க...?"

"கள்ள ஓட்டு போட்டவங்களுக்கு நன்றி சொல்லி போஸ்டர் ஒட்டினாராம்....!"

"தலைவரை 'உங்கள் வீட்டுப் பிள்ளை'ன்னு சொன்னது தப்பாப் போச்சா.... ஏன்?"

"எல்லார் வீட்டுலயும் போய் செலவுக்கு 'பாக்கெட் மணி' கேக்கறார்...!"

"மதியாதார் தலைவாசல் மிதிக்க மாட்டேன்...."

"அதுக்காக உங்க கட்சி ஆபீசுக்கே நீங்க போகலைன்னா எப்படி தலைவரே....?"

"கட்சியில மாற்றம் தேவைன்னு தலைவர் சொன்னது தப்பாப் போச்சா... ஏன்?"

"அவரைத் தவிர எல்லோரும் வேற கட்சிக்கு மாறிட்டாங்க...!"

"தலைவரை ஏன் மேடையில வச்சு எல்லோரும் இப்படி அடிக்கறாங்க...?"

"ஓட்டப்பந்தயத்துல முதலாவதா வந்த ஒரு பொண்ணுக்கு 'ஓடுகாலி'ன்னு பட்டம் கொடுத்தாராம்...!"