பில் கிளின்டன்
வில்லியம் ஜெஃபர்சன் கிளின்டன் அல்லது பில் கிளின்டன். இவர் ஆகஸ்டு 19, 1946 ஆம் ஆண்டு பிறந்தார். ஐக்கிய அமெரிக்காவின் 42வது குடியரசுத் தலைவர் ஆவார். இதன் முன் இவர் ஆர்கன்சஸ் மாநிலத்தின் ஆளுனர் ஆவார். இவரின் மனைவி இலரி 2008 இல் அமெரிக்க குடியரசுத் தலைவர் தேர்தலில் மக்களாட்சிக் கட்சியின் தலைவராக போட்டியிட்டார் . வட அமெரிக்க சுதந்திர வர்த்தக கோட்பாட்டிலும் நல காப்பீட்டுதிட்டத்திலும் இவரது செயல்திட்டங்கள் நடுநிலைமையுடன் விளங்குவதாக கருதப்பட்டன.
