பிரளய பேதங்கள்

bookmark

பிரளய பேதங்கள் பிரளயம் என்பது அழிவை கொடுக்கக்கூடியதாகும். (பிரளயத்தினை தமிழில் கற்பம் என்றும் குறிப்பிடப்படுகின்றது) இந்த உலகத்தில் தோன்றிய எந்தவொரு பொருளும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின்பு அழிந்தே தீர வேண்டும் என்பது இறைவனால் இயற்கைக்கு வகுக்கப்பட்ட நியதியும் கூட. அந்த நீயதி அனைத்து இடத்திலும் இருக்கின்றது.இந்த அழிவு என்பது நான்கு விதமாக பிரிக்கப்பட்டிருக்கிறது. அவைகள் 1.நைமித்திகம் 2.பிராகிருதம் 3.ஆத்தியந்திகம் 4.நித்தியம்நைமித்திக பிரளயம் என்பது ஒவ்வொரு மன்வந்தரத்தின் முடிவிலும் நிகழ்வது. ஒவ்வொரு மன்வந்தரமும் எழுபத்தொரு சதுர்யுகங்கள் கொண்டது.பிராகிருத பிரளயம் என்பது சதுர்முகன் உடைய ஆயுளில் இறுதியில் பிரம்மாண்டமானது. சகல பூதங்களும் (அனைத்து பிரம்மாக்களும் அழிந்து) மூல பிரகிருதியுடன் இணைந்து கொள்வதாகும். இந்த நிகழ்வின்போது எதுவும் இருக்காது.ஆத்தியந்திக பிரளயம் என்பது ஒரு ஜீவாத்மா மோட்சம் அடைந்த பின்பு மீண்டும் பிறவா நிலையில் இருக்கக்கூடிய நிலையாகும். இது அந்தம் என்றும் அழைக்கப்படுகின்றது. அதாவது ஆத்தியந்திக பிரளயம் என்று அழைக்கப்படுகின்றது.நித்திய பிரளயம் என்பது அவரவர்களின் வினைகளுக்கு ஏற்ப உண்டாகும் பிறப்பும், இறப்பும் ஆகும். இனி சிருஷ்டியின் பேதங்களை பற்றியும் உமக்கு எடுத்து கூறுகின்றோம். அதை தெளிவாக அறிந்து கொள்வாயாக.