பாண்டியர்கள் பற்றிக் கூறும் வரலாற்றுச் சான்றுகள்

bookmark


அசோகனின் கல்வெட்டுக்களில்:

மகத நாட்டு அரசர்கள் மௌரியர்கள். மௌரிய அரசன் பேரரசர் அசோகர் கல்வெட்டுக்களில் பாண்டிய நாடு பாண்டியர் பற்றிய செய்திகள் உள்ளன.

மகாவம்சத்தில்:

இலங்கையை ஆண்ட விஜயன் தனியாட்சி புரிந்தவன் இவன் பாண்டிய மன்னன் ஒருவனின் மகளை மணந்தான். அப்பாண்டிய மன்னனுக்கு ஆண்டுதோறும் பல பரிசுகளை அனுப்பினான் என்று மகாவம்சம் கூறுகின்றது.

பாண்டியர் பற்றி சங்க காலப் பதிவுகள்:

பாண்டியர்கள் சந்திர வம்சத்தைச் சார்ந்தவர்கள் எனவும். வேப்பம் பூ மாலை அணிந்தவர்கள் எனவும் மீன்கொடியினை உடையவர்கள் எனவும் சங்க கால நூற்குறிப்புகள், கல்வெட்டுக்கள், சாசனங்கள் மற்றும் மெய்க்கீர்த்திகளும் வரலாற்று மூலங்களாக உள்ளன.

கல்வெட்டுக்கள், இலக்கியங்கள் மற்றும் சங்க காலப் பதிவுகள் மூலம் பாண்டிய அரசர்கள் பற்றிக் காண்போம் வாருங்கள். பொதுவாகப் பாண்டியர்கள் முற்காலப் பாண்டியர்கள், கடைச்சங்க காலப் பாண்டியர்கள், இடைக்காலப் பாண்டியர்கள், பிற்காலப் பாண்டியர்கள், தென்காசிப் பாண்டியர்கள் என்று வகைப்படுத்தப் படுகின்றனர்.

இதில் முதலில் முற்காலப் பாண்டியர்கள் பற்றிக் காண்போம் வாருங்கள்.