நாரத்தம் பழம்
நாரத்தம் பழம் மலச்சிக்கல் மற்றும் சிறுநீரகக்கல் நோய்களுக்கு மருந்தாகிறது.
மேலும் ரத்தத்தை சுத்தம் செய்யவும், வாதம், வயிற்றுப் புண், வயிற்றுப் புழு ஆகியவற்றை நீக்கும் தன்மையுடையது.
இந்த பழத்தின் சாறு வாந்தியை நிறுத்தும். பசியை தூண்டிவிடும்.
தினமும் ஒரு நாரத்தம் பழம் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும். உடலுக்கு புத்துணர்வு கிடைக்கும்.
நாரத்தம் பழம் சாப்பிட்டு வந்தால் பித்தம், தலைச்சுற்றல், மயக்கம் ஆகியவை நீங்கும்.
