நாடகம்
"என்ன சார் இது? நல்ல வரன்... பொண்ணு போட்டோ கொடுங்கன்னு கேட்டா லவ்வரோட இருக்கற போட்டோவைத் தர்றீங்க?"
"இந்தக் கண்றாவிய நீங்களும் பார்க்கணும்னுதான் கொடுத்தேன்!"
"சுமாரா உங்க நாடகம் எத்தனை மணி நேரம் ஓடும்?"
"ஒரு 2 மணி நேரம் ஒடும்!"
"அப்ப 2 மணி நேரமும் சுமாராத்தான் இருக்கும்னு சொல்றீங்க!"
"தலைவர் ஓட்டுக்குப் பணம் கொடுக்கறதை எவ்வளவு நாசுக்காச் சொன்னாரு கவனிச்சியா?"
"கவனிக்கலையே!"
"என்னை என் குடும்பத்திற்காக உழைப்பவன் என்று கூறுகிறார்கள், நான் என் குடும்பத்துக்கு மட்டுமா சொத்து சேர்க்கிறேன், நாட்டில் உள்ள அனைத்துக் குடும்பத்திற்காகவும்தான் சொத்து சேர்க்கிறேன்."
"டிக்கெட் எல்லாம் முடிஞ்சு போச்சு எல்லாம் போங்க... போங்கன்னு சொல்றோம்ல!"
"ஏன் என்ன ஆச்சு ஃபுல் ஆயிடுச்சா?"
"நீங்க வேற, மேட்சே அங்க முடிஞ்சு போச்சு."
டாக்டர்: உங்க கணவருக்கு தூக்கத்தில நடக்கிற வியாதி ஒரு வருடமாக இருக்கிறதென்று தெரிந்தும் ஏன் சொல்லல?
மனைவி: அதுவா, நீங்க அட்வைஸ் பண்ணின மாதிரி அவர் வாக்கிங் போறதே இல்ல. அட்லீஸ்ட் இப்படியாவது நடக்கட்டும் என பேசாம இருந்துட்டேன்.
டாக்டர்: அப்படியா, இப்ப ஏன் சொன்னீங்க?
மனைவி: அதுவா, இவர் தூக்கத்தில நடக்கிறப்போ ஏதாவது ஆயிடிச்சினா எனக்கு தர்ற காசை நிப்பாட்டிப் புடுவாங்க இல்லியா? அதுதான்.
