மேக்கப்மேன்
"என்னத்த ரொம்ப நேரமா தேடுறீங்க... கண்ணாடியப் போட்டுக்கிட்டுத் தேட வேண்டியதுதானே?"
"அந்தக் கண்ணாடியத்தான் எங்கே வச்சேன்னு தேடிக்கிட்டுருக்கேன்!"
"உன்னோட மாமியார் கிணத்திலே விழுந்திட்டாளாமே. அப்புறம் என்ன ஆச்சு?"
"நான் பக்கத்து வீட்டு கிணத்திலேதான் தண்ணி எடுத்துக்கிறேன்!"
"உன் கணவரை எதுக்கு எடக்கு மடக்கா திட்டினே?"
"நான் போன் பண்ணினா நாய் குரைக்கிற மாதிரி செல்போன்ல ரிங்டோன் செட் பண்ணி வெச்சிருக்கார் அதான்."
"உங்களுக்கு ஏதாவது பணப் பிரச்சினையா டாக்டர்?"
"ஆமா.. ஏன் கேட்கிறீங்க?"
"என்னோட சொத்தைப் பல்லை எடுக்கச் சொன்னா, நைஸா தங்கப் பல்லை எடுத்துட்டீங்களே!"
"நேருக்கு நேரா பேயைப் பார்த்தாக்கூட அதோ போறானே அவன் பயப்படமாட்டான்."
"ஏன்..?"
"அவன் சினிமா நடிகைகளுக்கு மேக்கப் மேனாக பத்து வருஷமா இருக்கிறான்."
