நகைச்சுவை நடிகர்

bookmark

"உன் சம்சாரம் ஊர்ல இருந்து இன்னைக்கு ரிட்டர்ன் ஆகறா, வருத்தப்படாம சந்தோஷமா இருக்கியே?"

"நான் இன்னைக்கு ஊருக்கு எஸ் ஆகறேனே?"

கேர்ள்: அன்பே! உன்னை கடைசி வரைக்கும் கைவிட மாட்டேன்!

பையன்: உங்க வீட்ல யாரையுமே நான் நம்ப மாட்டேன்!

கேர்ள்: ஏன்?

பையன்: உங்க அக்காவும் இப்படித்தான் சொன்னா!

"காபி ஏன் உடம்புக்கு நல்லது இல்லை?" 

"ஏன்னா, அதுல ரெண்டு ஈ இருக்கு."

"அந்த நடிகர் ஏன் எப்பவும் கோல்ட் செயின கடிச்சிக்கிட்டே இருக்காரு?" 

"அவரு 'நகை'ச்சுவை நடிகர் இல்லையா."

பெண் 1: அக்கா இன்னைக்கு என் புருஷன் ஊருக்கு போறாரு... இன்னைக்கு ராத்திரி மட்டும் என் கூட துணைக்கு படுங்களேன்...

பெண் 2: அடிப் போடி... உனக்கும் உன் புருஷனுக்கும் வேற வேல இல்ல! யார் ஊருக்கு போனாலும் என்னையே கூப்பிடுறீங்க!!