தீபாவளி ஸ்பெஷல்: தலை தீபாவளி

bookmark

"கபாலி, தலை தீபாவளிக்கு வர்ற எங்க மாப்பிள்ளையை..."

"வரவேற்கணுமா ஏட்டய்யா..?"

"சும்மா மிரட்டி திருப்பி அனுப்பிடணும்..!"

"கண்டிப்பா அடுத்த வருஷம் தீபாவளிக்கு மோதிரம் போடுறேன் மாப்ளே..."

"அப்போ மோதிரம் போட்ட பிறகே நான் ஊருக்குக் கிளம்பறேன் மாமா!"

"என்னடா இந்த வருஷம் உனக்கு தலை தீபாவளி தானே.. மாமனார் வீட்டுக்குப் போகலையா?"

"அட! நீ வேற.. தலை தீபாவளிக்குப் போன என் மாமனாரே இன்னும் அவர் மாமனார் வீட்டுலத்தான் இருக்காருடா..."

"நம்ம தலைவர் இன்னமும் புதுமாப்பிள்ளையாவே இருக்காரா... எப்படி?"

"ஒவ்வொரு தீபாவளிக்கு முன்னாடி ஒரு திருமணத்தைப் பண்ணி தலை தீபாவளி கொண்டாடிடுறாரே!"

"ஹைய்யா.. தீபாவளி வரப்பேகுது ஜாலின்னு கத்திக்கிட்டே போறாரே யாரு அவரு.." 

"பட்டாசுக்கடைக்காரரா?"

"இல்லை... பிக்பாக்கெட் திருடன்."