நகரப் படலம் - 146
களிப்புடையன இவை எனல்
146.
இடை இடை, எங்கணும், களி அறாதன:-
நடை இள அன்னங்கள்; நளின நீர்க் கயல்;
பெடை இள வண்டுகள்; பிரசம் மாந்திடும்
கட கரி; அல்லன மகளிர் கண்களே!
இடை இடை எங்கணும் களி அறாதன- இடங்கல்தோறும்
எப்பொழுதும் மகிழ்ச்சி நீங்காமலிருப்பவை; நடை இள அன்னங்கள்-
அழகிய நடையுடைய இளமையான அன்னங்களும்; நளின நீர்க்கயல்-
தாமரை மலர்கள் பூத்த நிர்நிலைகளில் உள்ள கயல் மீன்களும்;
பெடை இள வண்டுகள்- தம் பெண் இனத்துடன் கூடி வாழும் ஆண்
வண்டுகளும்; பிரசம் மாந்திடும் கடகரி- பிரசத்தை உண்ணும்
மதயானைகளும்; அல்லன மகளிர் கண்களே- இவற்றை அல்லாமல்
பெண்களின் கண்களுமேயாம். 54
