தென்ன மரத்துல தேள் கொட்டினா பன மரத்துல நெரி ஏறுதாம்
விளக்கம் :
ஒருவர் ஒரு தவறு செய்துள்ளார் என்று வைத்துக் கொள்வோம். நாம் அந்த தவறை சுட்டிக் காட்டவில்லையென்றாலும், வேறு ஒருவர் அந்த தவறை செய்திருப்பார். அதைபற்றி நாம் பேசினாலும் இவரைப் பற்றிதான் சொல்கிறோம் என்று சில நேரங்களில் சண்டைக்கு வருவதுண்டு. அதாவது வேறு விதமாக, ஒருவர் ஒரு தவறுக்கு தண்டனை அனுபவிக்கிறார் என்றால், வேறொருவர் தான் செய்த வேறொரு தவறை நினைத்து பயப்படுவதை இந்த பழமொழியை உபயோகித்து கூறலாம்.