தூபம்போல் என் செபம் உந்தன் பாதம் சேரவேண்டும்

bookmark

தூபம்போல் என் செபம் உந்தன் பாதம் சேரவேண்டும்
நேசத் தந்தாய் உந்தன் அருள் எம்மைத் தேற்றவேண்டும்

1. வாழும் திருச்சபையின் நலம் யாவும் நல்கவேண்டும்
வாழ்வும் அவள் மொழியும் உந்தன் அரசை கட்ட வேண்டும்

2. நாட்டின் பொது நலனை என்றும் காக்க மனம் வேண்டும்
நீதி உடன் அன்பில் மக்கள் வாழ்வு உய்ய வேண்டும்

3. நேசம் கொண்ட நண்பர் சுற்றத்தாரும் வாழவேண்டும்
தியாகம் செய்து உதவும் உபகாரிகள் வாழவேண்டும்

4. நோயில் வாடும் மாந்தர் நலம்காண அருள் வேண்டும்
வாடிச் சுமை தாங்கும் மக்கள் பாரம் நீங்க வேண்டும்