திரு அவதாரப் படலம் - 226

bookmark

226.

“காமமும். வெகுளியும். களிப்பும். கைத்த அக்”
காமுனி இவண் அடைந்தனன்கொல் - கொவ்வை வாய்த்
தாமரை மலர் முகத் தரள வாள் நகைத்
தூம மென் குழலினர் புணர்த்த சூழ்ச்சியால்?” 
 
காமமும். வெகுளியும் களிப்பும் கைத்த- காமம். வெகுளி. மயக்கம்
ஆகிய   மூன்றினையும்   வெறுத்து   நீக்கிய;   அக்கோ  முனி  -
முனிவர்களுக்கெல்லாம்   தலைவனாகிய   அந்தக்  கலைக்    கோட்டு
முனிவன்;  கொவ்வை வாய். தாமரை மலர்முக தரள  வாள்  நகை.
தூம மென் குழலினர்- கொவ்வைக் கனி போன்ற வாயையும்.  தாமரை
மலர்   போன்ற   முகத்தையும்  முத்துப்  போன்ற    ஒளிபொருந்திய
பற்களையும் அகிற் புகை யூட்டிய மென்மையான  குழலையும்   உடைய
அப்பெண்கள் புணர்த்த சூழ்ச்சியால்- செய்த சூழ்ச்சியினால்;  இவண்
அடைந்தனன் கொல் - இங்கு வந்து சேர்ந்தனன் போலும்.

காமம்:   ஆசை. வெகுளி: கோபம். களிப்பு:  மயக்கம். ஒரு பொருள்
மீதெழும்  ஆசையும். அப்பொருள்  கிடைக்காத  போதெழும்  சினமும்.
இவைகளால் மனநிலை மாறுபட்டு அடையும்  மயக்கமும்  ஆகியவற்றை
வெறுத்து   நீத்தவன்   என்பதால்  ‘’காமமும்...   கோமுனி’’  என்றார்.
முனிவனை   அப்பெண்கள்   இனிய  சொற்களைக்   கூறியும்.   முகம்
மலர்ந்து  புன்னகை காட்டியும். வணக்கத்தாலுமே   அழைத்து  வந்தனர்
என்பது.  தோன்ற.  வாய். முகம். நகைகளைச்  சிறப்பித்தார்   எனலாம்.
தரளம்:  முத்து.  ‘’தூம  மென்  குழல்’’  என்பதற்குப்  புகை  போன்ற
கூந்தல்   என்பர்.  அதனினும்.   அகிற்புகையூட்டப்  பெற்ற   கூந்தல்
என்பதே   சிறப்பு.  புணர்த்தல்:  சேர்ப்பித்தல்.   இப்பாட்டு   குளகம்.
அடுத்த பாடலுடன் பொருள்முடிவுபெறும்.                       47