திரு அவதாரப் படலம் - 219
219.
‘அருந் தவன் தந்தையை அற்றம் நோக்கியே.
கருந் தடங் கண்ணியர். கலை வலாளன் இல்
பொருந்தினர்; பொருந்துபு. “விலங்கு எனாப் புரிந்து
இருந்தவர் இவர்” என. இனைய செய்தனர்.
அருந்தவன் தந்தையை அற்றம் நோக்கியே- அரிய தவத்தை
உடைய கலைக் கோட்டு முனிவனது தந்தையாகிய விபாண்டகர்
இல்லாத சமயம் பார்த்து; கரும் தடம் கண்ணியர் கலைவலாளன்
இல்பொருந்தினார்- கரிய. அகன்ற கண்களை உடைய அப்பெண்கள்
எல்லாக்கலைகளிலும் வல்லவராகிய அம்முனிவரின் குடிலை
அடைந்தனர்; பொருந்துபு- அங்ஙனம் அடைந்த போது; விலங்கு
எனா புரிந்து இருந்தவர்- மனிதர்களை விலங்கினங்களோடு ஒப்ப
மதித்து இருக்குமவன். முனிவர்களே; இவர் என இணைய செய்தனன்-
இவர்கள் எனக் கருதிப் பின்வருமாறு செய்யத் தொடங்கினான்.
அற்றம்: சமயம் (மறைவு). கண்களால் மயக்கி வசப்படுத்தும்
தன்மையால் கருந்தடங் கண்ணியர்’ என்கிறார். கலை வலாளன்
எல்லாக் கலைகளிலும் வல்லவன் (கலைக் கோட்டு முனிவன்)
பொருந்துபு: பொருந்த (செய்பு என்ற வாய்பாட்டு வினையெச்சம்
எனா: என்று (செயா என்ற வாய்பாட்டு) வினனையெச்சம். தந்தை
இல்லாத தருணத்தை எதிர்பார்த்திருந்த அம்முனிவனது உறையுளை
அடைந்த அப்பெண்கள். தன்னைப் போன்ற தவமுனிவர்கள் இவர்கள்
எனக் கருதி உபசரிக்கத் தொடங்கினான் என்பது கருத்து. 40
