திரு அவதாரப் படலம் - 201
201.
‘வளையொடு திகிரியும். வடவை தீதர
விளைதரு கடுவுடை விரிகொள் பாயலும்.
இளையவர்கள் என அடி பரவ ஏகி. நாம்.
வளைமதில் அயோத்தியில் வருதும்’ என்றனன்..
வளையொடு திகிரியும்- எமது படைக்கலங்களான சங்கும்
சக்கரமும்; வடவை தீதர விளைதரு கடு உடை விரிகொள்பாயலும்-
வடவா முகாக்கினியும் தீய்ந்து போகச் செய்யும் நஞ்சினை உடைய.
எமதுபடுக்கையான அனந்தனும்; இளையவர்கள் என அடி பரவ-
தம்பியராகப் பிறந்து எம்மை அடிவணங்க; ஏகி. வனைமதில்
அயோத்தியில் வருதும் என்றனன்- பூமியில் சென்று சுற்றும் வளைந்த
மதிலை உடைய அயோத்தி மாநகரில் அவதரிப்போம் என்றான்.
‘வினையொடு’என்பதிலுள்ள ‘ஒடு’ உம்மைப் பொருளில் வந்தது.
வளை: சங்கு. வளைந்திருப்பது காரணமாக இப்பெயர் அமைந்தது.
கடல் நடுவே ஒரு குதிரை இருப்பதாகவும். அதன் முகத்தில்
தோன்றும் தீயில் கடல் நீர் வற்றிக் கொண்டிருப்பதாகவும்
கூறுவர்.வடவை முகத்தில் தோன்றும் தீ என்பதால் “வடவைத் தீ”
என்றார். தடு: நஞ்சு. பாயல்: படுக்கை. விரிகொள்: விரிதலை உடைய
சக்கரம் பரதனாகவும். சங்கு சத்துருக்கனாகவும். அனந்தன்
இலக்குவனாகவும் வந்தனர் என்பார். அயோத்திக்கு ‘சாதேகம்’ என்ற
ஒரு பெயரும் உண்டு. 22
