திரு அவதாரப் படலம் - 202

bookmark

202.

என்று அவன் உரைத்தபோது. எழுந்து துள்ளினார்; 
நன்றிகொள் மங்கல நாதம் பாடினார்;-
‘மன்றல் அம் செழுந் துளவு அணியும் மயனார்
இன்று எமை அளித்தனர்’ என்னும் ஏம்பலால்
 
என்று அவன் உரைத்த போது- அத்திருமால்  கூறியருளிய போது
கேட்ட  (அத்தேவர்கள் அனைவரும்); மன்றல் அம் துளவு  அணியும்
மாயனார்-   மணம்  பொருந்திய.  அழகிய   துழாய்மாலை  அணியும்
மாயனாகிய திருமால்;இன்று எமை அளித்தனர் என்னும்  ஓம்பலால்-
இன்று   எங்களை   யெல்லாம்    காப்பாற்றி   அருளினார்  என்னும்
மகிழ்ச்சியால்; எழுந்து   துள்ளினார்  நன்றிகொள்  மங்கல  நாதம்
பாடினார்-  எழுந்து  நின்று ஆடினார்கள் நன்மையான  மங்கல  கீதம்
பாடினார்கள்.

துள்ளுதல்:     ஆடுதல்.  நன்றி:  நன்மை.  மங்கலம்: சுபம். இங்கு
வெற்றிக் குறித்து நின்றது. நாதம்: ஓசை.  இசையைக்  குறித்தது. மன்றல்:
மணம்.  மாயம்:  சாமர்த்தியம் அதனை  உடையவன்  மாயன்.  ஏம்பல்:
மகிழ்ச்சி.   திருமால்   கூறியது   கேட்ட   தேவர்கள்   மகிழ்ச்சியால்
ஆடிப்பாடினர் என்பது கருத்து.                               23