திரு அவதாரப் படலம் - 197
197.
‘எங்கள் நீள் வரங்களால் அரக்கர் என்று உளார்.
பொங்கு மூஉலகையும் புடைத்து அழித்தனர்;
செங் கண் நாயக! இனி தீர்த்தல்; இல்லையேல்.
நுங்குவர் உலகை. ஓர் நொடியில் என்றனர்.
எங்கள் நீள்வரங்களால் - எங்களுடைய மிகுந்த வரபலத்தால்;
அரக்கர் என்றுளார் பொங்கு மூவுலகையும் புடைத்தழித்தனர்-
அரக்கர் என்னும் ‘கொடியவர்கள் வளர்ந்தோங்கிய
மூவுலகத்துயிர்களையும். பொருது கொன்றனர்; செங்கண்மால் நாயக-
அழகியகண்களையுடைய தலைவனே!; இனித்தீர்த்தல் இல்லையேல்-
இனி. இவ்வரக்கர்களின் கொடிய செயலைத் தீர்க்கவில்லையானால்; ஓர்
நொடியில் உலகை நுங்குவே என்றனர்- வெகுவிரைவில் உலகம்
முழுவதையும் அழித்துவிடுவர் என்றார்கள்.
நீள்வரம்: நீண்ட வாழ்வையும். நிறைந்த வலிமையையும் தரும்வரம்
என்பது பொருள் (பிரமனும். சிவனுமாகிய தேவர்கள் கொடுத்தவரம்)
என்பதால் ‘எங்கள் நீள்வரம்’ என்றனர் புடைத்து அழித்தல்:
அடித்துக் கொல்லுதல். நுங்குதல்: விழுங்குதல் என்பதும் ஒரு
பொருளாம். 18
