திருப்பாடல் 41

bookmark

ஆண்டவரே என்னை குணப்படுத்தும்
உமக்கு எதிராக பாவம் செய்தேன்

1. எளியோரின் நலனில் அக்கறை கொள்பவர் பேறுபெற்றவர்
துன்ப நாளில் ஆண்டவர் அவரை விடுவிப்பார்
ஆண்டவர் அவரை பாதுகாப்பார் நெடுங்காலம் வாழவைப்பார்
நாட்டில் பேறுபெற்றவராய் விளங்கச்செய்வார்
எதிரிகளின் விருப்பத்திற்கு அவரை கையளிக்கமாட்டார் -பல்லவி

2. படுக்கையில் அவர் நோயுற்று கிடக்கையில் ஆண்டவர் அவருக்கு துணைசெய்வார்
நோய் நீங்கி படுக்கையினின்று அவர் எழும்பும்படி செய்வார்
ஆண்டவரே எனக்கு இரங்கும் என்னை குணப்படுத்தும்
உமக்கு எதிராக பாவம் செய்தேன் என்று மன்றாடினேன். -பல்லவி

3. நானோ நேர்மையில் உறுதியாய் இருக்கின்றேன்
நீர் எனக்கு ஆதரவு அளிக்கின்றீர் உமது முன்னிலையில் என்றும்
நிலைநிற்கச் செய்கின்றீர்
இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவர் புகழப் பெறுவாராக
ஊழி ஊழியாய் புகழப் பெறுவாராக ஆமென் ஆமென். -பல்லவி