திருப்பாடல் 72

bookmark

ஆண்டவரின் காலத்திலே சமாதானமும் நீதியுமே செழித்தோங்கும்.

1. ஆண்டவரின் காலத்தில் நீதி தழைத்தோங்கும்;
நிலா உள்ள வரையில் மிகுந்த சமாதானம் நிலவும்.
8 ஒரு கடலிலிருந்து அடுத்த கடல்வரைக்கும் ஆண்டவர் ஆட்சி செலுத்துவார்;
பேராற்றிலிருந்து உலகின் எல்லைவரைக்கும் ஆண்டவர் அரசாள்வார். -பல்லவி

12 தம்மை நோக்கி மன்றாடும் ஏழைகளை ஆண்டவர் ஆதரிக்கின்றார்
வறியோர்க்கு ஆண்டவர் உணவு வழங்குகின்றார்
திக்கற்றவர்கள் ஆண்டவரை கூவியழைப்பார்கள் ஆண்டவர் செவிகோடுப்பார்
ஏழைகளின் உயிரைக் காப்பாற்றுவார். -பல்லவி

17. ஆண்டவர் பெயர் என்றென்றும் நிலைத்திருப்பதாக!
கதிரவன் உள்ளவரையில் அவர் பெயர் நிலைப்பதாக!
ஆண்டவர் மூலம் மனிதர் ஆசிபெறுவார்களாக
எல்லா நாட்டினரும் ஆண்டவரை வாழ்த்துவார்களாக -பல்லவி