தாமஸ் ஜெஃவ்வர்சன்

தாமஸ் ஜெஃவ்வர்சன்

bookmark

தாமஸ் ஜெஃவ்வர்சன், ஏப்ரல் 13, 1743 ஆம் ஆண்டு பிறந்தார். அவர்கள் ஐக்கிய அமெரிக்காவின் மூன்றாவது குடியரசுத் தலைவராக இருந்தவர். இவர் 1776 ன் ஐக்கிய அமெரிக்காவின் விடுதலை அறிவிப்பின் முதன்மையான ஆசிரியர் ஆவார். ஐக்கிய அமெரிக்காவை நிறுவிய மூதாதையர்களில் விடுதலையையும் தனிமனித உரிமைகளையும் போற்றும் ரிப்பப்லிக்கனிசம் என்னும் அரசியல் கொள்கையை செல்வாக்குடன் முன் நிறுத்தியவர்களில் ஒருவர். இவர் குடியரசுத் தலைவராக இருந்த காலத்தில்,  அதாவது 1803 ஆம் ஆண்டு 2.1 மில்லியன் சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள லூயிசியானா என்னும் பகுதியை பிரான்ஸ் நாட்டிடம் இருந்து சுமார் 15 மில்லியன் டாலர் விலை கொடுத்து வாங்கப்பட்டது. இந்த லூசியான என்னும் பகுதியானது இன்றுள்ள அமெரிக்க மாநிலங்களான ஆர்கன்சஸ், மிசௌரி, ஐயோவா, ஓக்லஹாமா, கன்சாஸ், நெப்ராஸ்கா, மிசௌரி ஆற்றுக்குத் தெற்கே உள்ள மினசோட்டா, வட டகோட்டா, ஏறத்தாழ தென் டகோட்டா முழுவதும், வட நியூ மெக்சிக்கோ, வட டெக்சஸ், கொலராடோவின் கிழக்குப் பகுதி, லூயிசியானா மோண்டானா, வயோமிங்கின் பகுதிகள் என மிகப்பெரும் நிலப்பகுதியாகும்.  அப்பகுதிகள் இன்னும் கூட இவரது பெயரைப் பறை சாற்றும் விதத்தில் அமைந்து உள்ளது. இவர் ஜூலை 4, 1826 ஆம் ஆண்டு காலமானார்.