தாடகை வதைப் படலம் - 403

bookmark

திருமாலுக்கும் இந்திரனுக்கும் தீமையா
விளைந்தது? எனல்

403.    

‘ஆதலால். அரிக்கு. ஆகண்டலன்தனக்கு.
ஓது கீர்த்தி உண்டாயது அல்லால். இடை
ஏதம் என்பன எய்தியவோ? சொலாய்-
தாது அடர்ந்து தயங்கிய தாரினாய்!’
 
அரி- திருமால்; ஆகண்டலன் - இந்திரன்; கீர்த்தி - புகழ்; ஏதம்
-  குற்றம்; சொலாய் - சொல்லாய்;  தாது - மகரந்தம்;  அடர்ந்து  -
செறிந்து; தயங்கிய - விளங்கிய; தார் - மாலை.              39-4