தாடகை வதைப் படலம் - 401
திருமால் கியாதியைக் கொன்ற வரலாறு கூறுதல்
401.
‘பிருகு என்னும் பெருந் தவன்தன் மனை
வரு கயல் கண் கியாதி. வல் ஆசுரர்க்கு
உருகு காதலுற. உறவாதலே
கருதி. ஆவி கவர்ந்தனன். நேமியான்.
பிருகு- பிருகு முனிவன்; கயல்கண் - கயல் போன்ற கண்; வல்
ஆசுரர்க்கு - வலிய அசுரர்களுக்கு; உறவாதல் - உறவு
உடையவதனால்; கருதி - எண்ணி; ஆவி - உயிர்; நேமியான் -
ஆழிப்படையுடைய திருமால். 39-2
