தாடகை வதைப் படலம் - 385
இராவணன் ஆணையால் இவள்
இன்னல் செய்கின்றாள் எனல்
385.
‘இலங்கை அரசன் பணி
அமைந்து. ஓர் இடையூறா.
விலங்கல் வலிகொண்டு. எனது வேள்வி
நலிகின்றாள்;-
அலங்கல் முகிலே! - அவள்
இ(வ்) அங்க நிலம் எங்கும்
குலங்களொடு அடங்க நனி கொன்று
திரிகின்றாள்;
இலங்கை அரசன் பணி அமைந்து- இலங்கை வேந்தனான
இராவணனுடைய கட்டளையை மேற்கொண்டு; விலங்கல் வலிகொண்டு
- மிருக பலம் கொண்டவளாய் (எனக்கு); ஓர் இடையூறாய் - ஒரே
இடையூறாக இருந்து கொண்டு; எனது வேள்வி நலிகின்றாள் -
(அரக்கர்கள்) எனது வேள்வியை (நிறைவேறவிடாமல்)
துன்புறுத்துகின்றாள்; அலங்கல் முகிலே - மாலையணிந்த மேகம்
போன்றவனே!; அவள் இவ்வங்க நிலம் எங்கும் - அவ்வரக்கி. இந்த
அங்க நாட்டில் வாழ்பவர்களை எல்லாம்; குலங்களொடு அடங்க -
அவர்களது குலத்தோடு முழுதும்; நனிகொன்று திரிகின்றாள் - மிகவும்
அழித்துக் கொன்று திரிந்து கொண்டிருக்கிறாள்; பணி - கட்டளை
(வேலையுமாம்).
பணி: கட்டளை (வேலையுமாம்). வலி: மிருகபலம் (மூர்க்கத்தனமான
வலிமை). நலிதல்: வருத்துல் அலங்கல்: மாலை. முகில்: மேகம். இந்தப்
பகுதியெல்லாம்: அங்கநாடு. இங்கு வாழ்பவர்களை எல்லாம் இந்த
அரக்கி குலத்தோடு கொன்று தின்று திரிகிறாள். இராவணனது
கட்டளைப்படி அரக்கர்கள் எனது வேள்விக்கு இடையூறு செய்து
துன்புறுத்துகின்றனர் என்றான். முனிவன் என்பது கருத்து. 26
