தாடகை வதைப் படலம் - 378
தாடகையின் குமாரர்கள் அகத்தியரை அணுகுதல்
378.
‘இடியொடு மடங்கலும் வளியும் ஏங்கிட.
கடி கெட அமரர்கள். கதிரும் உட்கிட
தடியுடை முகில் குலம் சலிப்ப. அண்டமும்
வெடிபட. அதிர்த்து. எதிர் விளித்து. மண்டவே.
வளி - காற்று; அடங்கலும் - எல்லாமும்; கடிகெட - மகிழ்ச்சி
நீங்க; கதிர் - சூரியன்; தடி உடை - மின்னலை உடைய; மண்ட -
நெருங்க. 20-13
